அகமதாபாத் (குஜராத்): அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகள் அதிகம் இறந்ததையடுத்து, செயற்கை சுவாசக் கருவிகள் தட்டுப்பாட்டின் காரணமாக தான் இது நிகழ்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அகமதாபாத் அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1200 படுக்கை வசதிகொண்ட கரோனா சிறப்பு மருத்துவமனையில், வெறும் 180 செயற்கை சுவாச கருவிகள் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நீதிபதி ஜே.பி. பர்டிவாலா தலைமையில் குஜராத் உயர் நீதிமன்ற அமர்வு, கரோனா பாதிக்கப்பட்டவர்களை யூ.என். மேதா சிறுநீரக மருத்துவமனையிலும், பழைய வி.எஸ். மருத்துவமனையிலும் சேர்க்க உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவையடுத்து, குஜராத் அரசு கரோனா நோயாளிகளை நீதிமன்ற அமர்வு பரிந்துரைத்த மருத்துவமனைகளில் மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.