உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் 13 வயது சிறுமி மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் தாத்ரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அக்டோபர் 6ஆம் தேதி சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட போதிலும், அச்சிறுமியின் தாயார் அக்டோபர் 8ஆம் தேதியே வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் புத்த நகர் காவல் துணை ஆணையர் ரிந்தா சுக்லா கூறுகையில், "சிறுமிக்கு தெரிந்த நபர்களே குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 12 வயது சிறுவன் மூலம் அச்சிறுமியை வீட்டுக்கு அழைத்துள்ளனர்.
சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது போக்சோ, கூட்டுப்பாலியன் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துரித விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஹத்ராஸ் விவகாரம்: பகீர் கிளப்பும் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வர்