காசி-மஹாகல் எஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதாக செய்திகள் பரவியது. இது பற்றி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுப்படுத்தினார். அப்போது அவர், “ரயில்வே ஊழியர்கள் சிலர் பக்தியின் காரணமாக, சிவபெருமான் படத்தை ரயிலின் சோதனை ஓட்டத்தின்போது வைத்துள்ளனர்.
அப்போது ரயில் பயணிகள் யாரும் இல்லை. ரயிலில் சாய் பாபா, விநாயகர் உள்ளிட்ட படங்களையும் வைத்து வணங்குகின்றனர். நமாஸ் செய்யவும் தடையில்லை. இதனை உணர்ந்து, அசாதுதீன் ஓவைசி ட்வீட் செய்ய வேண்டும். ஓவைசியின் ட்வீட் 99 விழுக்காடு தவறு. இது முற்றிலும் பிளவுப்படுத்தும் நோக்கம் கொண்டது” எனக் கூறினார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். அந்த ரயிலில், சிவபெருமானுக்கு 64ஆம் எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: 'வீட்டில் சேகரித்து பள்ளிக்கு அனுப்புங்கள்'- நெகிழியை ஒழிக்க புதுமையான முயற்சி...!