கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு தேசிய சட்டம். எனவே நாம் அனைவரும் அதன் பக்கம் ஒன்றாக நிற்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
எனவே, நாம் இதனை அரசியலின் ஒத்த கருத்தாகப் பார்க்கக் கூடாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்த மாட்டேன் என்று எந்த மாநிலமும் சொல்ல முடியாது. அவை சாத்திமில்லாத ஒன்று. அது அரசியலமைப்பிற்கு விரோதமானது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கலாம். சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம்.
இந்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தலாம். ஆனால், அரசியலமைப்பு ரீதியாக அதைச் செயல்படுத்த மாட்டேன் என்று கூறுவது சிக்கலை உருவாக்கும். மேலும் இது அதிக சிரமத்தை உருவாக்கும்" என்று தெரிவித்தார்.