ETV Bharat / bharat

முதலமைச்சரின் சொந்த மண்ணில் வானில் போக்குவரத்துக்கு தடா! - நோய்டா

லக்னோ: கிரேட்டர் நொய்டா பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதலமைச்சர் கலந்துகொள்ளவிருப்பதால், வானில் தனியார் ட்ரோன் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

UP CM on 2-day visit to Noida
UP CM on 2-day visit to Noida
author img

By

Published : Mar 1, 2020, 6:43 PM IST

Updated : Mar 1, 2020, 7:12 PM IST

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக கவுதம் புத்தர் நகருக்கு இன்று வந்துள்ளார். செக்டார் 108இல் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணையர் அலுவலகத்தை திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து நாளை மருத்துவ கல்லூரியையும், மாவட்ட மருத்துவமனையையும், மூன்று நடைமேடைகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.

இதுமட்டுமின்றி ரூ. 1,369 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டுக் கடும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை கிரேட்டர் நொய்டா காவல் துறையினர் விதித்துள்ளனர்.

குறிப்பாக, முக்கிய சாலைகள் அனைத்திலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கவுதம் புத்தர் நகரில் தனியார் ட்ரோன்கள் பறக்கவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி கலவரம் - நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் குரல் ஒலிக்குமா ?

Last Updated : Mar 1, 2020, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.