இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இது இந்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இதற்கு பாராட்டை அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இந்த தடுப்பூசி பாஜகவின் தடுப்பூசி எனவும், இதை நான் செலுத்திக்கொள்ள மாட்டேன் எனவும் தடாலடியாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலடித் தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “இது நமது விஞ்ஞானிகளை பெருமைப்படுத்தும் தருணம். நாட்டிற்கு கிடைத்த நற்செய்தியை சந்தேக கண்ணுடன் பார்ப்பவர்கள் மக்கள் மத்தியில் வேண்டுமென்றே பயத்தை விதைக்கிறார்கள். மக்களின் சுகாதார பிரச்னையில் அரசியலைக் கலப்பது மோசமான செயல்” என்றார்.
இதையும் படிங்க: ம.பி. அமைச்சரவை விரிவாக்கம்: சிந்தியா ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி