ETV Bharat / bharat

அதிக நேரம் முகக்கவசம் அணிவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்! - உயிரணு மூலக்கூறு உயிரியல் மையம்

கரோனா தொற்று காற்றில் பரவும் தன்மை இருப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அதிக நேரம் முகக்கவசம் அணிந்துகொள்வதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் தெரிவித்துள்ளது.

coronavirus
coronavirus
author img

By

Published : Jul 9, 2020, 12:27 AM IST

கரோனா தொற்று பரவல் குறித்து உலகம் முழுவதிலும் உள்ள 239 அறிவியல் ஆய்வாளர்கள் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு உலக சுகாதார மையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், கரோனா தொற்று காற்றில் பரவும் என்றும் ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அதிலிருந்துவரும் பெரிய எச்சில் துளிகளை காட்டிலும் சிறிய துளிகள் காற்றில் அதிக நேரம் இருக்கும் எனவும் மேலும் பெரிய எச்சில் துளிகள் விரைவில் கீழே விழுந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட உலக சுகாதார மையம், தகுந்த இடைவெளி, கூட்டமான இடங்கள், காற்றுப் புகா இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் மூலம் வரும் இருமல், தும்மலின் துளிகள் காற்றில் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் தொற்று பரவல் குறித்து மேலும் ஆய்வு நடத்த அதன் தரப்பில் இருந்து ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

ஆகையால் மக்கள் யாரும் கரோனா வைரஸ் காற்றிலே எல்லா இடங்களிலும் மிதந்துக் கொண்டிருக்கும் என்று அச்சப்பட வேண்டும்.

எப்போதும் போல தகுந்த இடைவெளியை பின்பற்றியும் தொடர்ந்து முகக்கவசத்தை அதிக நேரம் அணிவதை கடைப்பிடிக்கலாம் என இந்திய உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் தலைவர் ராகேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் உலகின் மிகப்பெரிய கோவிட் பராமரிப்பு மையம் ரெடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.