மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உயிரி தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத் துறையினரிடம் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய ஹர்ஷ் வர்தன், ”கடந்த ஏழு நாள்களில் 80 மாவட்டங்களில் ஒருவர்கூட கரோனா தொற்றால் பாதிப்படையவில்லை. 47 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. அதேபோல் 39 மாவட்டங்களில் கடந்த 21 நாள்களில் ஒருவர்கூட கரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை.
129 மாவட்டங்கள் கரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 300 மாவட்டங்கள் கரோனாவால் அதிகளவில் பாதிப்பு ஏற்படாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார்.
மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் 29 ஆயிரத்து 435 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 632 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 6,869 பேர் குணமடைந்துள்ளனர். 934 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா அச்சம்: செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்த குஜராத் அரசு!