பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்தத் தேர்தலில் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சியை காட்டிலும் பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளது.
இதனால் மாநிலத்தில் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், நிதிஷ் குமார் பிகாரை உதறிவிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்துவார்” என்றும் ஆரூடம் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த இந்துஸ்தான் இந்துஸ்தானி அவாம் மோர்சா (ஹெச்ஏஎம்-HAM) கட்சியின் நிறுவனத் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி கூறுகையில், “பிகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
காட்டாட்சி தலைவர்களின் வெற்று கோரிக்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர். நாங்கள் வாக்காளர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். நான் உறுதியாக நம்புகிறேன், மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் தொடர்வார். மக்களுக்கு எங்கள் கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை அளித்துள்ளனர். பிகாரில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடரும்” என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்துஸ்தான் அவாம் மோர்சா (ஹெச்ஏஎம்-HAM) கட்சிக்கு 7 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அதில் நான்கு தொகுதிகளில் ஜிதன் ராம் மஞ்சி வெற்றி பெற்றுள்ளது. இமாம்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஜிதன் ராம் மஞ்சியும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: “குழப்பமில்லை, நிதிஷ் குமார்தான்”- சுஷில் குமார் மோடி