ETV Bharat / bharat

குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை : நித்யானந்தா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு! - POCSO

அகமதாபாத் : ஆசிரமக் குருகுலப் பள்ளியில் தங்கி படித்து வந்த குழந்தைகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டி, பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நித்யானந்தா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Nithyananda probe: Cops booked for showing porn to children
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை : நித்யானந்தா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!
author img

By

Published : Mar 10, 2020, 4:28 PM IST

நித்யானந்தாவின் செயலாளராக வேலை பார்த்து வந்த பெங்களூரூவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, தனது மூன்று குழந்தைகளையும் அவரது ஆசிரமத்தில் படிக்க வைத்து வந்துள்ளார். இந்நிலையில், வெளிநாடு தப்பிச் சென்ற நித்யானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கடும் சித்ரவதை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

தனது குழந்தைகளைக் காண சென்ற ஜனார்த்தன ஷர்மாவை, அகமதாபாத் ஆசிரத்திலிருந்து சந்திக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.

இதனையடுத்து, தனது மூன்று குழந்தைகளையும் அகமதாபாத் தியானப்பீட ஆசிரமத்தில் இருந்து, மீட்டுத் தரச் சொல்லி ஜனர்த்தன ஷர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக குஜராத் மகளிர் குழந்தைகள் நல ஆணையத்திலும் புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஆண்டு குழந்தைகளை பெற்றோரின் அனுமதியின்றி அடைத்துவைத்த குற்றச்சாட்டில் நித்யானந்தா மீது விவேகானந்தா நகர் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில், நித்யானந்தாவுக்கு உதவியாக குஜராத்தைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் பெண் அதிபர் மஞ்சுளா பூஜா ஷெராஃப் இருந்தது, போன்ற பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

குஜராத் குழந்தைகள் நல ஆணையமும், காவல் துறையினரும் இணைந்து நடத்திய விசாரணையில் குருகுலத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களைக் காட்டி, நித்யானந்தா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை புரிந்ததாக உண்மை வெளியானது.

இதனடிப்படையில், நித்யானந்தா மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகமதாபாத் ஹிராபூர் கிராம ஆசிரமத்தின் நிர்வாகியும் நித்யானந்தாவின் சீடருமான கிரிஷ் துர்லபதி, ' நித்யானந்தா ஆசிரமம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை அலுவலர்கள், ஆணைய அலுவலர்கள் உண்மைக்கு மாறான செய்திகளைக் கூறுகின்றனர். ஆசிரமக் குழந்தைகளை அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்’எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் கிரிஷ் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கிரிஷ் துர்லபதியின் மனுவை வழக்கைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Nithyananda probe: Cops booked for showing porn to children
குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை: நித்யானந்தா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

நீதிமன்ற உத்தரவை அடுத்து நித்யானந்தாவின் அகமதாபாத் ஆசிரமம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் ராணா, மாவட்ட துணை கண்காணிப்பாளர் கே.டி.கமரியா, காவல்துறை கண்காணிப்பாளர் ரியாஸ் சர்வையா, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பவேஷ் படேல், அலுவலர் திலீப் மெர் உள்ளிட்ட 14 விசாரணைக் குழு உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சாம்பலைப் பூசி ஹோலியைக் கொண்டாடும் விநோத கிராமம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.