மாநிலங்களவை உறுப்பினரான நிர்மலா சீதாராமன், 2016 ஆம் ஆண்டு வர்த்தக, தொழில்துறை அமைச்சராக 2017 ஆம் ஆண்டு வரை நீடித்தார். இதனையடுத்து, அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, பாதுகாப்புத்துறையை அலங்கரித்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார். இந்நிலையில், இன்று மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.