2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
திகார் சிறையில் அடைக்கப்பட்ட இந்த நான்கு பேர் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படவுள்ளனர்.
இந்தச் சூழலில், மரண தண்டனை கைதிகளுள் ஒருவரான வினய் தன்னை தூக்கிலிட வேண்டாம் என குடியுரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்ததாக அவரது வழக்கறிஞர் ஏ.பி. சிங் தெரிவித்தார்.
இதனிடையே, வழக்கின் மற்றொரு குற்றவாளியான அக்ஷய் குமார் மரண தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். முன்னதாக, மரண தண்டனைக்கு எதிராக வினய் ஷர்மா, முகேஷ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்குத் தூக்கு உறுதி!