நிர்பயா கொலை கைதி அக்ஷய் சிங்கின் மனைவி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் விவாகரத்து மனு அளித்தார். அந்த மனுவில், “பலாத்கார குற்றவாளியின் மனைவியாக இறக்க விரும்பவில்லை” என கூறியுள்ளார். இது குறித்து அக்ஷய் சிங்கின் மனைவி புனிதா தேவி கூறுகையில், “எனக்கு நீதி தாருங்கள் அல்லது என்னையும் கொன்றுவிடுங்கள். என் கணவர் அப்பாவி.
எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறோம். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் கொல்லப்பட்டு வருகிறோம். இந்த சமூகம் ஏன் இவ்வாறு இருக்கிறது” என்று கூறினார்.
இந்நிலையில் புனிதா தேவி நீதிமன்ற வாயிலில் மயங்கியும் விழுந்தார். நிர்பயா பாலியல் கொலை வழக்கில் கடந்த 5ஆம் தேதி, நால்வரையும் மார்ச் 20ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட விசாரணை நீதிமன்றம் கறுப்பு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26) மற்றும் அக்ஷய் சிங் (31) ஆகியோர் நாளை காலை திகார் சிறையில் தூக்கிலிடப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதுதான் சரியான நீதியா?