ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு குற்றவாளியின் 'கேலியான' சீராய்வு மனு - இன்று விசாரணை

author img

By

Published : Dec 17, 2019, 11:49 AM IST

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளியான அக்‌ஷய் குமாரின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Nirbhaya case: SC to hear review plea of death-row convict today

நிர்பயா வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார், தன்னுடைய மரண தண்டனையை சீராய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று நடைபெறவிருக்கிறது.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

இதில், அக்‌ஷய் குமார் தவிர மற்ற மூவரின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அக்‌ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங்கும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அக்‌ஷய் குமாரின் மனுவில் அரசை கேலி செய்வதைப் போல குறிப்பிட்டிருந்தார்.

அதில், காற்று மாசுபாட்டால் பெரும்பான்மை மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, எங்களை ஏன் தூக்கிலிட வேண்டும் என்ற நக்கல் தொனியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நிர்பயா தினம்: தொடரும் பாலியல் கொடுமைகளுக்கு தீர்வு எப்போது?

Intro:Body:

Nirbhaya case: SC to hear review plea of death-row convict today

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.