ETV Bharat / bharat

வாரங்கல் 9 பேர் மரணம் தற்கொலை அல்ல: தடயவியல் நிபுணர்கள் - ஹைதராபாத் தடயவியல் நிபுணர்கள்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் கிணற்றிலிருந்து ஒன்பது பேர் இறந்தது தற்கொலையால் அல்ல என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Warangal nine people death
Hyderabad murder case
author img

By

Published : May 25, 2020, 12:04 PM IST

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் உள்ளது குரேகுண்டா கிராமம். அங்கு உள்ள கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு குழந்தை உள்பட ஒன்பது பேரின் உடல்கள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து தடயவியல் நிபுணர்கள் நேற்று கூறுகையில், ” இறப்புகள் தற்கொலைகள் அல்ல. ஒன்பது பேரில் ஏழு பேரின் உடல்களில் கீறல் காயங்கள் உள்ளன. அவர்கள் இழுத்து வரப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டதாக தெரிகின்றது. குழந்தையின் உடலில் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை, இரண்டு அல்லது மூன்று நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்” என்றனர்.

இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட தெலங்கானா காவல் துறையினர் சஞ்சய் குமார் யாதவ் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஒன்பது பேரும் மேற்கு வங்கம், பிகார் மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்திருந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: திருச்சியில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.