உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 என்னும் கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான சிகிச்சை வழிமுறைகள் தொடர்பாக NIH எனப்படும் தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள், புள்ளியியல் வல்லுநர்கள் மற்றும் பிற நிபுணர்கள் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சுகாதார மருத்துவ சேவைகளில் ஈடுபடுவோருக்கான இந்த வழிமுறைகள் முதல் வரிசை வீரர்களாக ஏற்கனவே கரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவத் தளத்தில் இயங்கிவரும் இத்துறை சார்ந்தவர்களின் அனுபவம், ஆலோசனைகளைப் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது இரு வேறு சிகிச்சைமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. முதலாவது கரோனா வைரஸை நேரடியாகத் தாக்கும் ஆண்டி வைரஸ்கள். மற்றொன்று, நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி வைரஸிற்கு எதிராக செயல்படவைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை முறை.
இந்த வழிமுறைகளில் மருந்துகளின் பயன்பாடு குறித்த மருத்துவத் தரவுகள், தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன. கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக சந்தேகிக்கப்படுபவர்கள் முதல், தீவிர சிகிச்சைப் பெற்று வருபவர்கள் வரை அனைவருக்கும் சிகிச்சையளிக்கும் முறை படிப்படியாக இதில் விளக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவுப் பொருட்களை பதுக்கிய அலுவலர்கள் - பசிக்கொடுமையில் வாடும் கிராம மக்கள் போராட்டம்