நாகாலாந்தைச் சேர்ந்த இயக்கம் தேசிய சோசியலிச சபை. கிலோன்சர் ரவி வாங்கசோ, ஆபம், எல்லி கேடோக், அப்சோலன் தங்குள் ஆகியோர் இந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் ஆவார்கள். சட்டப்பேரவை உறுப்பினர் திரோன் அபோக்கை இவர்கள் நால்வரும் கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு முகமை இவர்கள் நால்வரையும் மிக முக்கிய குற்றவாளி பட்டியலில் சேர்த்துள்ளது. இவர்கள் நால்வர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானமாக அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை பிடிப்பதற்காக அசாம் - அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்புப் படையினர் தீவரம் காட்டி வருவதாக தெரிகிறது.