பாகிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகள், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்காக, அவ்வப்போது எல்லையில் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்படுகின்றனர்.
இதற்கு ஒரு படி மேல் சென்று, இந்திய கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், பாதுகாப்பு நிறுவனங்களின் இருப்பிடங்கள், ரகசிய இடங்கள் போன்ற தகவல்களை அறிந்துக்கொள்ள இந்தியாவில் பண ஆசைக்காட்டி முகவர்கள் நியமிக்ககின்றனர்.
இவர்களுக்கு மத்தியலான உரையாடல் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக நடைபெறுவது தெரியவந்தது. இத்தகைய சர்வதேச உளவு மோசடி குறித்து அறிந்த உளவு துறையினர் அனைத்து விதமான வங்கி பணப்பரிமாற்றம், தகுந்த ஊடங்கள் உரையாடல், தொலைபேசி இணைப்புகள் போன்றவற்றை கண்காணித்து வந்தனர்.
இத்தகைய விசாரணையில் தான், கிடேலி இம்ரான் என்பவருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருப்பது உறுதியானது.
மேலும், தகவல்களை பரிமாற்றம் செய்துக்கொண்டு உளவாளியாக செயல்பட்டதும் தெரியவந்தது. தற்போது, இம்ரானை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவனர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.