இக்குழுவிற்கு இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கே.எஸ். ரெட்டி தலைமை தாங்கவுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
கோவிட்-19 தொற்றால் மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் , குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் மதிப்பிடுவதற்கு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் நிபுணர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய கொள்கையையும் இந்தக் குழு பரிந்துரைக்கும். குறிப்பாக, கரோனா வைரஸ் காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான பிரச்னைகளை மத்திய மாநில அரசுகள் எவ்வாறு கையாண்டன என்பது குறித்தும், இக்குழு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுராயாவில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒரே வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பாக விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம், உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.