ETV Bharat / bharat

காலேஸ்வரம் திட்டம்: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் - காலேஸ்வரம் நீர்பாசன திட்டம்

டெல்லி: காலேஸ்வரம் திட்டத்தில் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

ngt-alleges-violations-in-kaleswaram-projects-environmental-permits

author img

By

Published : Oct 21, 2020, 2:18 AM IST

தெலங்கானா மாநிலத்தில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விவசாய பாசன வசதி பெறும் நோக்கில் காலேஸ்வரம் நீர்பாசன திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

அதில், திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததால், அதற்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது. முறையான சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்ட நிர்மாணம் மேற்கொள்ளக்கூடாது.

இந்த திட்டம் நிறைவடைந்தவுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு குழுவை அமைக்க வேண்டியது அவசியம்.

எனவே, ஒரு மாதத்திற்குள் ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைக்கவேண்டும். 2008 முதல் 2017ஆம் ஆண்டுவரை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஈடுசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறும் அந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டவேண்டும். அதுமட்டுமின்றி அந்தக் குழு அடுத்த மாதத்திற்குள் ஆய்வை முடிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.