ETV Bharat / bharat

புதிய பேருந்து நிலையம் அருகில் காய்கறிக் கடை - இந்திய ஊரடங்கு உத்தரவு

புதுச்சேரி: இந்திய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் தற்காலிகமாக காய்கறி கடை நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்

புதிய பேருந்து நிலையம் அருகில் புதிய காய்கறி கடை

author img

By

Published : Mar 31, 2020, 12:12 AM IST

கரோனா நோய்த்தொற்று வராமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, இறைச்சி, மளிகைப் பொருட்கள் வாங்க குபேர் மார்க்கெட் என்கின்ற பெரிய மார்க்கெட் பகுதியில் முன்னெச்சரிக்கை இல்லாமல் மக்கள் அதிகம் கூடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு தற்காலிகமாக புதிய பேருந்து நிலையம் அருகில் காய்கறி மட்டும் விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை முதல்வர் நாராயணசாமி தலைமையில் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் சிவா, மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விற்பனை செய்யும் இடத்தில் ஒரு மீட்டர் அளவில் பொதுமக்கள் நின்று காய்கறி வாங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

புதிய பேருந்து நிலையம் அருகில் புதிய காய்கறிக் கடை

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

பெரிய மார்க்கெட் பகுதியில் காய்கறி விற்பனை செய்யும்போது அதிகப்படியான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே அதனை தவிர்ப்பதற்காக புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி விற்பனை செய்வதற்கான முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

இந்நிலையில் நாளையிலிருந்து புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி விற்பனை செய்யப்படும். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அதேபோல் மளிகை பொருட்கள் குபேர் மார்க்கெட்டில் வழக்கம்போல் விற்பனை நடைபெறும், பழவகைகள் நேரு வீதி பகுதியில் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேல் பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.