ETV Bharat / bharat

அடிப்படை சுகாதார வசதியற்ற 200 கோடி மக்களுக்கு கோவிட்-19 பரவும் அபாயம்!

வாஷிங்டன் : உலகளவில் அடிப்படை சுகாதார வசதிகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் 200 கோடி மக்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

coronavirus
coronavirus
author img

By

Published : May 23, 2020, 2:48 AM IST

வாஷிங்டன் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ தர மதிப்பீடு மையம் நடத்திய ஆய்விலேயே இந்தத் தகவலானது வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின்படி, சஹாரா பாலைவனத்துக்குட்பட ஆப்ரிக்க நாடுகளில் உள்ள 50 விழுக்காடு மக்களுக்கு சோப்பு, சுத்தமான தண்ணீர் ஆகிய அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதென இந்த ஆய்வு அச்சம் தெரிவிக்கிறது.

மேலும், உலகின் 46 நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு சோப்பு, தண்ணீர் வசதி இல்லையெனக் கூறும் இந்த அறிக்கை, நைஜீரியா, சீனா, எத்தியோப்பியா, காங்கோ, வங்க தேசம், பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஐந்து கோடிக்கும் அதிகமானோருக்குக் கை கழுவும் வசதி இல்லையென வேதனைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் மைக்கேல் புரௌவர் கூறுகையில், "கோவிட்-19 எதிர்ப்பிற்கான முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கை கழுவுவது. துரதிர்ஷ்டவசமாகப் பல நாடுகளில் வாழும் மக்கள் அந்த வசதியின்றி உள்ளனர். ஹேண்ட் சானிடைசர், லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது தற்காலிகத் தடுப்பு முறையாக இருக்கலாம்.

ஆனால், கோவிட்-19ஐ எதிர்கொள்ளக் கை கழுவும் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். கை கழுவும் வசதி இல்லாமையால் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏழு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்" என்றார்.

இதையும் படிங்க : காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.