இது குறித்து டெல்லி காவலர் ஒருவர் கூறுகையில், "அடையாளம் தெரியாத நபர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளார். இது குறித்து பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் போக்குவரத்து காவலர் புனீத் கிரேவால் என்பது தெரியவந்தது.
200க்கும் மேற்பட்ட சிசிடிவி வீடியோ பதிவுகளை ஆராய்ந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி அவரை கைது செய்துள்ளோம். தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். முதற்கட்ட விசாரணையில், அவர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஐபிசி 354 டி, 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தால் துணைக் காவல் ஆய்வாளர் புனீத் கிரேவால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.