சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா, மும்பையின் நிழல் உலக தாதா கரம் லாலாவைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. சாம்னா செய்தித்தாளின் ஆசிரியர் சஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்திர காந்தி மும்பை வரும்போதெல்லாம் கரம் லாலாவை சந்திப்பார் என்று சஞ்சய் புதன்கிழமை கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சஞ்சய் உடனடியாக தனது கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
சஞ்சய்யின் இந்தக் கருத்து குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், காங்கிரஸ் கட்சி மும்பை நிழல் உலகத்தினால் வளர்க்கப்பட்டதா என்றும் மும்பை மீது தாக்குதல் நடத்தியவர்களைக் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிவசேனாவின் சாம்னா செய்தித்தாளில் விளக்கம் அளிக்கும் வகையில், "பிரதமர் பிரிவினைவாதிகளுடன்கூட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் சமீபத்திய காலங்களிலும் நடந்துள்ளன" என்று பாஜக காஷ்மீரில் மெகபூபா முஃப்தியுடன் கூட்டணியில் இருந்ததைக் குறிப்பிட்டிருந்தது.
முன்னாள் எம்.பி.யும் மகாராஷ்டிரா பாஜகவின் முக்கிய தலைவருமான உதயன்ராஜே போசாலேதான் சத்ரபதி சிவாஜியின் வாரிசு என்பதற்கு ஆதாரம் உள்ளதா என்றும் சஞ்சய் ரவுத் மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர், வீட்டுச் சிறையிலிருந்து நால்வர் விடுவிப்பு