ETV Bharat / bharat

ராஜஸ்தானின் கூவத்தூராக மாறிய ஜெய்ப்பூர் உல்லாச விடுதி!

ஜெய்ப்பூர் : கோவிட் -19 அச்சுறுத்தால் மக்கள் அவதியுற்றுவரும் சூழலில் ஐந்து நட்சத்திர விடுதியில் எம்.எல்.ஏக்களை தங்கவைத்து பொது மக்கள் பணத்தை செலவு செய்துவருவதாக காங்கிரஸ் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

ராஜஸ்தானின் கூவத்தூராக மாறிய ஜெய்ப்பூர் உல்லாச விடுதி!
ராஜஸ்தானின் கூவத்தூராக மாறிய ஜெய்ப்பூர் உல்லாச விடுதி!
author img

By

Published : Jul 22, 2020, 5:28 AM IST

கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அதிருப்தியில் இருக்கும் சச்சின் பைலட்டின் ஆட்சி மற்றும் கட்சி பொறுப்புகளை காங்கிரஸ் மேலிடம் பறித்ததையடுத்து, இந்த மோதல் உச்சம் தொட்டது.

ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுன் இணைந்து சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் சேகாவத் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர்லால் சர்மா ஆகியோர் பேசிய ஆடியோ டேப் இதனை வலுப்படுத்துவதாக அமைந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மீது அதிப்தி உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவையில் அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ராஜஸ்தான் ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதன் காரணமாக ராஜஸ்தானை ஆளும் அசோக் கெலாட்டின் அரசுக்கு ஒருவித நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இதனால், தன் பக்கம் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை குதிரைப்பேரத்திலிருந்து தக்க வைக்க ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அவர்களை அசோக் கெலாட் தங்க வைத்துள்ளதாக அறிய முடிகிறது. ஹோட்டல் ஃபேர்மாண்டில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யோகா செய்வது, கால்பந்து விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கோவிட் -19 பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் உயிருக்குப் போராடி வரும் சூழலில் மக்கள் பணியாற்ற வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேலிக்கையில் நேரம் கழிப்பதாக ட்விட்டர் பக்கங்களில் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தங்களது ட்விட்டர் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் "நான் அவர்களுக்கு வாக்களிக்க இரண்டு மணி நேரம் வரிசையில் நின்றது உல்லாச விடுதிகளில் நீங்கள் கழிப்பதற்காக அல்ல", "எம்.எல்.ஏ.க்களை ஆடம்பர விடுதியில் தடுத்நு வைத்து உங்கள் அரசாங்கத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது, ​​சமூகத்தில் மக்கள் துயருற்று வருவதையும் நினைத்தும் பாருங்கள்", "இது பொதுப் பணத்தில் விருந்துண்ணும் வெட்கமில்லாத ஆட்சியாளர்கள்" என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினரிடம் கருத்து கேட்டப்போது, " பாஜகவின் ஆட்சியில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்கவே ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொகுசாக இருக்கவேண்டுமானால், வெளிநாடுகளுக்கு சென்றிருப்போம். எம்.எல்.ஏக்களை தங்கள் தரப்புக்கு இழுக்க பாரதிய ஜனதா கட்சி குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற தான் நாங்கள் இவ்வளவு போராடுகிறோம். எம்.எல்.ஏக்களில் யாரும் பதவி விலகவில்லை என்பதால், அசோக் கெலாட் வெற்றிபெறுவது உறுதி" என்றனர்.

ராஜஸ்தானில் கோவிட்-19 பரவால் மக்கள் பாதிகப்பட்டிருக்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அங்கு செல்லாமல், ரிசார்டில் தங்கியிருக்கின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.