மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டிலிருந்தபடி பணிசெய்து கொண்டிருந்த போது, "கோவிட்-19" என்ற பெயரில் ஒரு இ-மெயில் வந்துள்ளது. இதனை அவர் கிளிக் செய்து பார்த்துள்ளார். அந்த நேரத்தில் அவருக்கு தெரியவில்லை அது ஹேக்கர் செய்த சதி என்று. இந்த ஊழியரின் லாப்டாப் வழியாக அந்த மென்பொருள் நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகள் பின்தொடர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்டு வருவதாகச் செய்தி வெளிவந்துள்ளது.
இதேபோன்று, எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆன்லைனில் படித்துக் கொண்டிருந்த போது, அவரது கம்ப்யூடர் ஸ்கிரீன் ஃபிரீசாகி, "குறிப்பிட்ட பணத்தை கொடுத்தால் தான் நீங்கள் உங்கள் கம்ப்யூடரை பயன்படுத்த முடியும்" என்ற அதிர்ச்சி மெசேஜ் தோன்றியது.
இதுபோன்று எண்ணற்ற குற்றங்கள் உலகெங்கும் அரங்கேறி வருகின்றன. பணப்பறிப்பு மட்டுமல்லாமல், குடும்ப உறவுகளிலும் சில கும்பல்கள் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன.
சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வரும் 'சாரி சாலன்ஞ்' போன்ற சவால்களை மேற்கொள்ளும் பெண்களின் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமல் திருடி அதனை தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக சைபர் கிரைம் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் வெளியிடவும் வாய்ப்பு உள்ளதென அவர்கள் எச்சரிக்கின்றனர்.
நாட்டில் ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து, பெண்கள் பெயரில் உருவாக்கப்படும் போலி பேஸ்புக் அக்கவுண்டுகளில் இருந்து பலருக்கு ஃபிரெண்டு ரெக்குவஸ்ட் வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கின்றனர் சைபர் கிரைம் நிபுணர்கள்.
ஆகையால் வீட்டிலிருந்த படி வேலைசெய்யும்போதோ, இணையத்தில் பொழுதினை கழிக்கும்போதோ எச்சரிக்கையுடன் இருங்கள். ஆன்ட்டி வைரஸ் சாஃப்டுவேர்களை டவுன்லோடு செய்து உங்கள் கம்ப்யூடர்களையும், ஸ்மார்ட் ஃபோன்களையும் பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள் என்கின்றனர்.
இதையும் படிங்க : உலக ஹீமோபிலியா தினம் - நாம் அறிந்துகொள்ள வேண்டியவை...