சுபாஷ் சந்திர போஸின் நினைவு தினமாக ஆகஸ்ட் 18ஆம் தேதி அனுசரிக்கப்பட்டாலும், சிலர் அதனை நம்ப மறுக்கிறார்கள். 1945ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் அவர் மரணிக்கவில்லை, தலைமறைவாக அவர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார் என சிலர் கூறுகின்றனர்.
நேதாஜி என மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ், சுதந்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்த மகத்தான தலைவர். "உங்கள் ரத்தத்தை கொடுங்கள். விடுதலையை நான் பெற்று தருகிறேன்" என்ற முழக்கத்தை முன்வைத்தவர் நேதாஜி.
நாட்டில் போற்றப்படும் தலைவர்களில் ஒருவரான நேதாஜியின் புகழை தங்களுக்கு ஆதரவாக மாற்றி அதில் பயன்பெற பல அரசியல் கட்சிகள் முயல்கின்றன. அவர் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பல இந்தியர்கள் நம்புகின்றனர். 1945ஆம் ஆண்டு ஃபார்மோசாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி நேதாஜி மரணித்தார் என அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1897ஆம் ஆண்டு, ஜனவரி 23ஆம் தேதி, ஒடிசாவில் (அந்த காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் ஒரு பகுதி) பிறந்தார். 1918ஆம் ஆண்டு, இளங்கலை தத்துவ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1920,30களில் அக்கட்சியின் முக்கிய முகமாக மாறினார். 1938 மற்றும் 1939 ஆகிய ஆண்டுகளில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சியின் தலைவர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்படுகிறது.
1935ஆம் ஆண்டு அவர் எழுதிய 'இந்திய போராட்டம்' என்ற புத்தகம் வெளியானது. ஆகஸ்ட் 18ஆம் தேதி, 1945ஆம் ஆண்டு, ஜப்பான் ஆளுகைக்கு உள்பட்ட ஃபார்மோசாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் இறப்பு இன்றளவும் பெரும் மர்மமாகவே உள்ளது.
இதையும் படிங்க: மனச்சோர்விலிருந்து மீள மருத்துவரின் ஆலோசனை என்ன தெரியுமா?