கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட இதய நோயாளிகளை கண்காணித்து அவர்களுக்கான மருத்துவ உதவி, ஆலோசனைகளை வழங்குவதற்காக நெஸ்ட் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான கேமராக்களை தயாரிக்கும் நோக்கில் அமெரிக்காவின் மவுண்ட் சினாய் சுகாதார அமைப்பு, கூகுள் நெஸ்ட் நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது.
நோயாளிகளை கண்காணிப்பதற்காக நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் நெஸ்ட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களின் இணைப்பு, கண்காணிப்பு அறைகளுக்கு தரப்பட்டிருக்கும். மருத்துவமனை ஊழியர்கள் கண்காணிப்பு அறைகளில் இருந்து கொண்டே நோயாளிகளை கண்காணிக்கலாம்.
இதன்மூலம், சுகாதாரத்துறை அளித்த வழிகாட்டுதலின்படி நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை ஊழியர்கள் செய்வது எளிதாகிறது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் முகக் கவசம் போன்ற மருத்துவ உபகரணங்களை அணிந்து கொண்டு நோயாளிகளின் அறைக்கு செல்வது கடினமாக இருக்கிறது. நோயாளிகளுடன் அதிக நேரம் செலவழிப்பது ஆபத்தான ஒன்று. நெஸ்ட் கேமராக்களின் உதவியோடு தகுந்த இடைவெளியை கடைபிடித்துக் கொண்டே இங்கிருந்தபடியே அவர்களை கண்காணிக்கலாம்" என்றார்.
இதையும் படிங்க: விதிகளை கடைப்பிடிக்காமல் உயிரிழந்த தொற்றாளருக்கு இறுதிச் சடங்கு: 9 பேருக்கு கரோனா!