உத்தரப் பிரதேச மாநிலம் மகர்ஜ்கஞ்ச் மாவட்டத்தில் இந்தோ-நேபாள எல்லையான சோனவுலியின் பகுதியில் ரூ. 2.17 கோடி மதிப்பிலான 6.1 கிலோ கஞ்சா உருண்டை(சரஸ்) வைத்திருந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று (செப் 13) கைது செய்துள்ளதாக காவலர் அசுதோஷ் சிங் தெரிவித்தார்.
சோம் பகதூர் (33) என்பவர் நேபாளத்திலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது, வழக்கமான பேருந்துகளை சோதனை செய்யும் போது கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற கடத்தல்காரர்களுடனான தொடர்பை கண்டறிய நேபாள பிரதிநிதியின் உதவியை பெற காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அவர் மீது போதை மருந்து, சைக்கோட்ரோபிக் பொருள்கள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.