ETV Bharat / bharat

இந்திய - நேபாள எல்லையில் அத்துமீறிய நேபாள மக்கள்!

author img

By

Published : Jul 26, 2020, 4:27 PM IST

டேராடூன்: இந்திய - நேபாள எல்லை அருகே காலி இடத்தில் நேபாள மக்கள் அத்துமீறி செடியை நட்டு வேலி போட முன்றதாக இந்திய தூதரகத்திற்கு தகவல் வந்துள்ளது.

இந்திய
இந்திய

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் தனக்பூரில் அமைந்துள்ள இந்திய-நேபாள எல்லைக்கு அருகே காலியாக உள்ள இடத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நேபாள மக்கள் செடியை நட்டு வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளனர்.

தகவலறிந்து விரைந்த எஸ்.எஸ்.பி வீரர்கள்(Sashastra Seema Bal) , நேபாள ராணுவ படையினர் நடவடிக்கைகளை தடுத்து வேலியை தகர்த்து எறிந்தனர். இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை எஸ்.எஸ்.பி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதையடுத்து, இந்திய தூதரக அலுவலர்கள் நேபாளம் அலுவலர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், " இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான மோதலை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம். ஒப்பந்தத்தின்படி உண்மையாக இருப்போம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.