ETV Bharat / bharat

உத்தரப் பிரதேத்திற்கு சொந்தமான பகுதியில் சாலை அமைக்கும் நேபாளம்!

லக்னோ: இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமிடையே எல்லை தொடர்பான மோதல் உச்சமடைந்துள்ள சூழ்நிலையில், உத்தரப் பிரதேத்திற்கு சொந்தமான பகுதியில் சாலை அமைக்கும் பணிகளில் நேபாளம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

India Nepal border
India Nepal border
author img

By

Published : Jul 6, 2020, 3:54 PM IST

இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே எல்லை மோதல் கடந்த சில மாதங்களாகவே நீடித்துவருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான இடத்தை நேபாள அரசு வரைபடத்தில் இணைக்கும் அவசர சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் அருகேவுள்ள ஆள் அரவமற்ற இந்தியா - நேபாள எல்லைப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளில் நேபாளம் ஈடுபட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து பிலிபிட் மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவாஸ்தவா சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றார்.

அப்போது செய்தியாளர்களிம் பேசிய மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவாஸ்தவா, "எல்லையில் இருக்கும் ஆள் ஆரவமற்ற பகுதியில் நேபாளம் சில கட்டுமானங்களை மேற்கொள்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு வந்தோம்.

India Nepal borde
எல்லை பகுதியை ஆய்வு செய்த உத்தரப் பிரதேச மாவட்ட ஆட்சியர்

ஆனால், இப்பகுதியில் எந்தவொரு கட்டுமான நடவடிக்கைகளும் நடக்காது என்று நேபாளம் தரப்பு தற்போது எங்களுக்கு உறுதியளித்தது. மேலும், இந்தியா சார்பில் எல்லை தூண்களின் வரை மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும்" என்றார்.

நேபாளத்துடன் உத்தரப் பிரதேசம் சுமார் 105 கிலோமீட்டர் எல்லையை பகிர்கிறது. அதில் பல பகுதிகள் ஆள் அரவமற்ற பகுதிகளாக உள்ளன. இதுபோன்ற ஆள் அரவமற்ற பகுதிகளில் இரு நாடுகளும் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா பீதியால் ஏரியில் குதித்து இளைஞர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.