இந்திய எல்லைப் பகுதிகளான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றின் மீது உரிமை கோரும் விதமாக நேபாள அரசு புதிய வரைப்படத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவிலிருந்து அத்துமீறி வரும் நபர்களால்தான் எங்கள் நாட்டில் கரோனா பரவல் அதிகரித்ததாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையேயான நல் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேபாள நாட்டிற்கு எதிராக இந்திய சேனல்கள் நேபாளத்தில் செய்தி பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், டிடி சேனலைத் தவிர மற்ற அனைத்து செய்திச் சேனல்களை ஒளிபரப்ப நேபாள அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அந்நாட்டில் நேற்று (ஜூலை 9) மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் பொய் சொல்கிறது