ETV Bharat / bharat

தேசிய பேரிடர் மீட்பு படையில் நாட்டு நாய்கள்! - தேசிய பேரிடர் மீட்பு  படையில் உள்நாட்டு நாட்டு நாய்கள்

லக்னோ: தேசிய பேரிடர் மீட்பு  படையில் நாட்டு நாய்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

dog
dog
author img

By

Published : Oct 30, 2020, 1:08 PM IST

நிலநடுக்கம், நிலச்சரிவு, சூறாவளி, வெள்ளம், சுனாமி, வறட்சி, தீ விபத்து போன்ற இயற்கை பேரழிவுகளின்போதும் நெருக்கடிக் காலத்திலும் தேசிய பேரிடர் மீட்பு படை முக்கிய பங்காற்றுகிறது. மனிதர்கள் மட்டும் ஈடுபட்டுவந்த பேரிடர் மீட்பு படையில் இனி நாய்களும் ஈடுபடவுள்ளன. அதன்படி நாட்டு நாய்கள் பேரிடர் மீட்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது குறித்து ராணுவ அலுவலர் பி.கே. திவாரி கூறுகையில், "பேரழிவுகளின் மீட்புப் பணியின்போது படைக்கு உதவுவதற்காக மூன்று நாட்டு நாய்களுக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ரக நாய்களைவிட நம் நாட்டு நாய்களுக்குத்தான் அதிக செயல்பாட்டுத் திறன் இருக்கிறது. இதனால் எளிதில் பயிற்சியளிக்க முடிகிறது.

இவற்றைக் கையாள கொஞ்சம் பொறுமை தேவை. நாட்டு நாய்களுக்குத்தான் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகம் உள்ளது. முன்னதாக, நாங்கள் வெளிநாட்டு நாய்களுக்குத் தான் பயிற்சி அளித்துவந்தோம். இப்போது உள்நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்களுக்கும் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளோம்.

அண்மையில் "மன் கி பாத்" நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் வீட்டில் நாய் வளர்க்க விரும்பினால் உள்நாட்டு நாய்களை வளர்க்க முயற்சி செய்யுங்கள் என்று கூறியது நாட்டு நாய்களுக்கான மவுசை அதிகரித்துவிட்டது. சுயசார்பு கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மோடி தெரிவித்திருந்தார்.

இது ஒரு உண்மையான முன்முயற்சியாகும். இதன் கீழ் நாங்கள் நாட்டு நாய்களுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டோம், அந்த நாய்களில் சில ஓடிவிட்டன. ஆனால் சிலவற்றுக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம் அவற்றில், இதுவரை, நாங்கள் மூன்று நாய்களை எங்கள் படையில் சேர்த்துள்ளோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.