பிகார் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் - நவம்பர் மாத காலக்கட்டத்தில் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்குள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதசார்பற்ற ஜனதாதளம், பாஜக, லோக் ஜனசக்தி, ஆர்.எல்.எஸ்.பி, ஜிதின்ராம் மஞ்சியின் எஃச்.ஏ.எம். ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்தல் களம் குறித்து மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பேசுகையில், ”இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணி சுமார் 220 தொகுதிகளில் வெற்றி பெற்று நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைப்போம். இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ள நிலையில், இதை சாத்தியப்படுத்த வேளாண், உணவு உற்பத்தி, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட துறைகளில் பிகார் முக்கியப் பங்காற்றும்” எனத் தெரிவித்தார்.
மறுபுறம், தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய பிகார் சென்றுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, அங்கு தனது பரப்புரையைத் தொடங்கவுள்ளார்.
இதையும் படிங்க: சீன எல்லைப் பிரச்னை எதிரொலி - உஷார் நிலையில் இமாச்சல்