ETV Bharat / bharat

கால்நடை மருத்துவர் கொலை வழக்கை கையில் எடுத்த தேசிய பெண்கள் ஆணையம்! - NCW constitutes inquiry committee to look into alleged killing of vet in Hyderabad

டெல்லி: கால்நடை மருத்துவர் கொலை வழக்கு குறித்து விசாரிக்க தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை குழு அமைத்துள்ளது.

NCW
NCW
author img

By

Published : Nov 29, 2019, 5:44 PM IST

ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவர், நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீடு திரும்பியபோது, அவரின் இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சராகியுள்ளது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த அம்மருத்துவர், தன் தங்கையிடம் ஃபோனில் பேசியுள்ளார். அப்பெண்ணின் தங்கை அருகிலுள்ள டோல்கேட்டுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

சில நிமிடங்கள் கழித்து மருத்துவரை, அவரது தங்கை தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், மருத்துவரின் செல்ஃபோன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அச்சமடைந்த மருத்துவரின் தங்கை, பெற்றோரிடம் கூறி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து மருத்துவரைத் தேடி வந்த காவல் துறையினருக்கு, நேற்று காலை ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியிலுள்ள ஷாத்நகர் மேம்பாலத்திற்குக் கீழே எரிந்த நிலையில் பெண் உடல் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஒருவேளை அது காணாமல் போன பெண் மருத்துவராக இருக்குமோ என்ற சந்தேகத்தில், காவல் துறையினர் அவரது தங்கையையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த அப்பெண், சில அங்க அடையாளங்களை வைத்து, அது தன் அக்காவின் உடலென்று அடையாளம் காட்டினார். பின்னர், பெண் மருத்துவரின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

உடற்கூறாய்வு செய்து முடித்ததற்குப் பின், பெண் மருத்துவர் அதிகாலை மூன்று மணியளவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, துப்பட்டாவால் அவர் கழுத்தை நெறித்துக் கொன்று பின் எரித்துள்ளனர் என்று கூறிய மருத்துவர்கள், சுமார் ஒரு மணி நேரம் அவர் உடல் எரிந்திருக்கிறது எனவும் அவரது உடலை உடற்கூறாய்வு செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் தகவலை தெரிவித்தனர்.

இதன் பின்னர் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை அவர்கள் தேடி வந்தனர். பெண் மருத்துவரின் தங்கை அளித்த தகவலின் அடிப்படையில், ஷாத்நகரில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆராய்ந்தனர். அதன்மூலம், அப்பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்த லாரி ஓட்டுநர், கிளினர் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் இருவரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரித்ததில், பெண் மருத்துவருக்கு உதவி செய்வது போல் நாடகமாடி, பின்னர் கடத்திச் சென்று டோல்கேட்டுக்குப் பின்னால் உள்ள காலி இடத்தில் வைத்து வன்புணர்வு செய்ததாகக் கூறியுள்ளார்கள்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிக்க தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை குழு அமைத்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் ரேகா சர்மா, "குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிவருவது இதன் மூலம் தெரியவருகிறது. இந்த வழக்கை நாங்கள் முன்வந்து எடுத்துள்ளோம். இந்த வழக்கின் விசாரணை வேகமாக நடைபெற வேண்டும். குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பெண் டாக்டர் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை - முடிவே இல்லாது நீளும் நிர்பயாக்களின் பட்டியல்!

Intro:Body:

NCW constitutes inquiry committee to look into alleged killing of vet in Hyderabad

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.