ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது பிஜு ஜனதா தளம் கட்சி. 147 தொகுகதிகளில் பிஜு ஜனதா தளம் கட்சி 112 இடங்களில் வெற்றிபெற்றது. அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை இன்று முதலமைச்சர் பதவியேற்குமாறு அம்மாநில ஆளுநர் கணேஷி லால் கடந்த ஞாயிறன்று அழைப்பு விடுத்திருந்தார்.
நவீன் பட்நாயக் பரிந்துரை செய்த 20 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு புவனேஸ்வரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் நவீன் பட்நாயக் ஒடிசா முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.