ஒடிசா முதலமைச்சராக கடந்த 19 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் இருந்துவருகிறார். தொடர்ந்து ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் பிஜு ஜனதா தளத்தை மாபெரும் வெற்றிபெற வைத்தவர் நவீன் பட்நாயக். மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால்தான் இவர் தொடர்ந்து வெற்றிபெறுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மாநிலத்தில் தொடர்ந்து ஊழல் நடைபெறுவதாக நவீன் பட்நாயக் மீது குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், ஊழலுக்கு எதிராக அவர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். ஊழலில் ஈடுபட்ட 15 அரசு அலுவலர்களை பதிவி நீக்கம் செய்துள்ளார். மேலும், ஊழலில் ஈடுபட்ட இருவரின் ஓய்வூதியத்தை நவீன் பட்நாயக் நிறுத்திவைத்துள்ளார். இது பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.