ஓடிஸாவில் தொடர்ந்து 5ஆவது முறையாக முதலமைச்சராக நவீன் பட்நாயக் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டார். மாநிலத்தில் மொத்தமுள்ள 146 தொகுதிகளில் 113 தொகுதிகளை கைப்பற்றி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனையடுத்து, தற்போது டெல்லி வந்தடைந்த நவீன் பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நான் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். ஒடிஸாவைத் தாக்கிய ஃபோனி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்துவேன். சிறப்பு மாநில அந்தஸ்த்து போன்ற நீண்டகால கோரிக்கைகளையும் பிரதமரிடம் முன்வைக்க உள்ளேன்" என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் நிதி அயோக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார். ஃபோனி புயல் நிவாரணமாக ஏற்கனவே ஒடிஸா மாநிலத்திற்கு 1000 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.