புது இந்தியா என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் கோவாடியாவில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு தேசியவாதம் குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தேசியவாதம் உச்சம் பெற்றதே சமகாலத்தின் பண்புகளாகப் பார்க்கப்படுகிறது. பல நாடுகளில் பல பரிமாணங்களில் தேசியவாதம் நிலைத்து நிற்கிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகியவை விளங்குகின்றன. உலகமயமாக்கலை நோக்கி இந்தியா செல்கிறது. காலநிலை மாற்றம், பிரிவினைவாதம், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது. ஒரு நாடு தேசியவாதத்தைக் கையாள்வதுபோல் மற்ற நாடுகள் அதனைக் கையாள்வதில்லை. மற்ற நாடுகளை அச்சுறுத்தவே தேசியவாதம் பயன்படுத்தப்படுகிறது.
பல நாடுகளில் இருப்பதுபோல் வரலாற்றைக் கண்டறிந்து சுதந்திரத்தை நிலைநாட்டவதே தேசியவாதம் என்கிறோம். ஜனநாயகம் பரவுவதன் மூலமே வரலாறு, கலாசாரம் ஆகியவற்றைக் கண்டறிய முடியும்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி கலவரத்தில் உளவுத்துறை அதிகாரி கொலை பயங்கரவாதிகளின் சதியா?