ETV Bharat / bharat

'வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அகில இந்திய அரசியலை பேசுகிறார் நாராயணசாமி' - ரங்கசாமி சாடல்

author img

By

Published : Feb 7, 2020, 9:28 PM IST

புதுச்சேரி: வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அகில இந்திய அரசியலை பேசி வருகிறார்  முதலமைச்சர்  நாராயணசாமி என எதிர்க்கட்சித் தலைவரும் என்ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

rangasamy
rangasamy

புதுச்சேரியில் அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டுத் தொடக்க விழா, ரெட்டியார்பாளையத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி விழாவை கொடியேற்றித் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், புதுச்சேரியில் எந்தவித வளர்ச்சித் திட்டத்தையும் ஆளும் திமுக, காங்கிரஸ் கூட்டணி செய்யவில்லை எனவும்; புதுச்சேரியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அகில இந்திய அரசியலை பேசிவரும் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியை வீணாக்கி விட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், 'புதுச்சேரியில் கேசினோ சூதாட்ட கிளப் தொடங்கி, அதன் மூலம் வருமானத்தைப் பெருக்க திட்டமிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. தனிநபர் ஒருவரின் லாபத்தைப் பெருக்கும் நோக்கில், இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும் அரசு நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இன்றி தவிக்கின்றனர்' எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய ரங்கசாமி, '2021ஆம் ஆண்டு புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்' என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டுத் தொடக்க விழா
இதையும் படிங்க: குழாய்கள் மூலம் கேஸ் இணைப்பு: காரைக்கால், நாகப்பட்டினம் பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி

Intro:அகில இந்திய அரசியலைப் பேசி புதுச்சேரியை வீணாக்கி வருகிறார் நாராயணசாமி என்று எதிர்க்கட்சித் தலைவரும் என்ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி பேசியுள்ளார்

Body:புதுச்சேரியில் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்கவிழா ரெட்டியார் பாளையத்தில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது கட்சி கொடியை ஏற்றி வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி

புதுச்சேரியில் எந்தவித வளர்ச்சி திட்டத்தையும் ஆளும் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு செய்யவில்லை எனவும் புதுச்சேரியில் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அகில இந்திய அரசியலை பேசி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியை வீணாக்கி விட்டதாக குற்றம்சாட்டினார்

புதுச்சேரியில் கேசினோ சூதாட்ட கிளப் தொடங்கி அதன் மூலம் புதுச்சேரியின் வருமானத்தை பெருக்குவது என்பது கண்டனத்துக்குரியது மேலும் தனிநபர் ஓருவருக்காக லாபம் பெருக்கும் நோக்கில் திட்டத்தை கொண்டுவர முயற்சி நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அரசு நிறுவனங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது இந்த அரசு புதுச்சேரியில் உள்ள மூன்று பஞ்சு ஆலைகளை திறக்க வழி செய்யாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இன்றி தவிக்கின்றனர் என கூறினார்

2021 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Conclusion:அகில இந்திய அரசியலைப் பேசி புதுச்சேரியை வீணாக்கி வருகிறார் நாராயணசாமி என்று எதிர்க்கட்சித் தலைவரும் என்ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி பேசியுள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.