ETV Bharat / bharat

மகாராஷ்டிரா சபாநாயகராக பொறுப்பேற்றார் நானா படோலே! - MahaVikasAghadi alliance Maharashtra

மும்பை: மகாராஷ்டிராவில் புதிதாக அமைந்துள்ள சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Nana Patole
Nana Patole
author img

By

Published : Dec 1, 2019, 1:12 PM IST

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி நானா படோலேவை அவைத் தலைவராக தேர்வு செய்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜகவை தனிமைப்படுத்தும் நோக்கில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில் இடைக்கால சபாநாயகர் தேர்வு தொடர்பாக அமளியில் ஈடுபட்டு பாஜக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து 169 எம்எல்ஏக்களின் ஆதரவோடு மகா அகாதி கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

இன்று புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சபாநாயகர் நானா படோலே ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் அனைவருக்கும் நியாயத்தை வழங்கும் வகையில் அவையை நடத்துவார் எனவும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவரான முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மரபை பின்பற்றி ஒருமனதாக சபாநாயகர் தேர்வை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

Intro:Body:

MahaVikasAghadi candidate & Congress leader Nana Patole has been elected as Maharashtra Assembly Speaker.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.