ETV Bharat / bharat

பாலியா துப்பாக்கிச் சூடு விவகாரம்: பாஜக எம்எல்ஏவுக்கு எச்சரிக்கை விடுத்த நட்டா - பாலியா துப்பாக்கிச் சூடு விவகாரம்

டெல்லி: பாலியா துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கின் விசாரணையில் எம்எல்ஏ சுரேந்திர சிங் தலையிடக் கூடாது என பாஜக தேசிய தலைவர் நட்டா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக எம்எல்ஏவுக்கு எச்சரிக்கை விடுத்த நட்டா

author img

By

Published : Oct 19, 2020, 5:28 PM IST

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் துர்ஜன்பூர் கிராமத்தில் திரேந்திர பிரதாப் சிங் என்ற உள்ளூர் பாஜக தலைவருக்கும் ஜெய் பிரகாஷ் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நியாய விலைக்கடைகளை ஒதுக்குவது குறித்த விவகாரத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஜெய் பிரகாஷை திரேந்திர பிரதாப் சிங் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச சிறப்பு காவல்படை, திரேந்திர பிரதாப் சிங்கை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இச்சம்பவம் என்னை வருத்தமடைய செய்துள்ளது. இது நடந்திருக்கக் கூடாது. ஒரு தலைபட்சமாக நடைபெறும் விசாரணையை கண்டிக்கிறேன். சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஆறு பெண்களின் வலியை யாரும் உணரவில்லை. திரேந்திர சிங் தற்காப்புக்காகவே சுட்டார்" என்றார்.

இந்நிலையில், பாலியா துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கின் விசாரணையில் சுரேந்திர சிங் தலையிடக் கூடாது என பாஜக தேசிய தலைவர் நட்டா எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச பாஜக தலைவர் சுவதந்திர தேவ் சிங்கை தொடர்புகொண்ட நட்டா, “வழக்கின் விசாரணையில் சுரேந்திர சிங் தலையிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 80 வீடுகளை குத்தகைக்கு எடுத்து ஏமாற்றிய தம்பதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.