ETV Bharat / bharat

வாகன ஓட்டுநர்களுக்கு கரோனா: மூடப்பட்ட மேற்கு வங்க தலைமைச் செயலகம்! - தலைமைச் செயலகமான நபன்னா கட்டடம் சுத்திகரிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் வாகன ஓட்டிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இரண்டு நாள்களுக்கு அம்மாநிலத் தலைமைச் செயலகம் மூடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க தலைமைச் செயலகம்
மேற்கு வங்க தலைமைச் செயலகம்
author img

By

Published : Jun 4, 2020, 2:15 PM IST

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு வாகன ஓட்டுநர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அம்மாநிலத் தலைமைச் செயலகமான நபன்னா கட்டடத்தை சுத்திகரிப்பு பணிகளுக்காக இரண்டு நாள்களுக்கு மூட மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து, ”எங்கள் அலுவலகத்தில் இரண்டு வாகன ஓட்டுநர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே மொத்த கட்டடமும் கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்திகரிக்கப்பட உள்ளதால் இரண்டு நாள்களுக்கு அலுவலகத்திற்கு யாரும் வர மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி, மேற்கு வங்கத்தில் 3,583 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் அம்மாநிலத்தில் இதுவரை 345 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : கால்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினர் பின்வாங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.