புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பில், முதலமைச்சர் நாராயணசாமியை சட்டபேரவையில் சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில், "கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழலில் மகளிர் சுய உதவிக் குழுகவினர், தனியார் நிதியகங்களின் மூலம் பெற்ற கடன் தொகையை நடப்பு மாதத்தில் செலுத்த வற்புறுத்தப்படுகின்றனர். எனவே, தனியார் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணித்து உடனடியாக புதுச்சேரி அரசு முறைப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, உருளையன்பேட்டை தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், புதுச்சேரி மாநில மகளிர் பாசறை செயலாளர் கௌரி, தொழிற்சங்க பாசறை செயலாளர் ரமேஷ், புதுச்சேரி செய்தித் தொடர்பாளர் திருமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, சூழ்நிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த கோரிக்கையை ஏற்பதாகவும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல - உச்ச நீதிமன்றம்