பெங்களூரு: அறை வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தக் கூடிய கரோனா தடுப்பு மருந்தை, மின்வேக்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கோவிட்-19 தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து செயல்பட்டுக்குக் கொண்டு வர பெரும் முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.
தற்போது மனிதர்களிடத்தில் சோதனை என பல மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகள் செயலாற்றி வரும் நிலையில், இதன் முழுவடிவம் கிடைத்தப் பிறகு, தடுப்பூசிகளை சேமிப்பதற்காக மிகவும் குளிரூட்டப்பட்ட இடங்கள் பெருமளவில் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு மருந்தை சேமித்து வைக்கும்படியான அறைகளை உருவாக்க திட்டமிட்டுவருகிறது. இச்சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த மின்வேக்ஸ் எனும் நிறுவனம், அறை வெப்பநிலையில் நிலைத்து நிற்கும் தடுப்பூசியைக் கண்டுப்பிடித்ததாக அறிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ரூ.15 கோடி தேவைப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. முதலீடுகள் கிடைக்கும்பட்சத்தில், நிறுவனத்தின் தடுப்பூசிக்கு சந்தையில் பெரும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.