ராம்நாத் கோவிந்த் சிங்கப்பூர் வெளியுறவுத் துறை தூதர் சைமன் வாங்குடன் நேற்று (செப். 10) காணொலி மூலம் உரையாடல் மேற்கொண்டார். அதில், இருநாட்டு உறவு குறித்து முக்கிய அறிக்கையை அவர் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "சிங்கப்பூர் அரசு அண்மையில் பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்குப் பாராட்டுகள். கரோனா காலத்திலும் இந்தத் தேர்தலை நடத்திக் காட்டியது அந்நாட்டின் சிறப்பான நிர்வாகத்தை வெளிப்படுத்துகிறது.
இருநாட்டு உறவும் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கரோனா பெருந்தொற்றை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொண்டது இரு தரப்புக்கும் இடையேயான உறவையும் நட்பையும் பிரதிபலிக்கிறது.
கோவிட்-19 இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுத்திருக்கலாம் - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தேகம்