கர்நாடக மாநிலம் ஹூப்ளி கோபன்கோபாவில் வசிக்கும் அருண் யாதவா நீண்ட காலமாக விநாயகர் சிலையை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். வறுமையின் கோர பிடியிலிருந்து மீள வழி தேடிய சுமன் ஹவேரிக்கு அருண், சிலை செய்ய வாய்ப்பு கொடுத்தார்.
இதையடுத்து, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சுமன் ஹவேரி விநாயகர் சிலைகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார். இந்த வேலை சுமனின் வாழ்க்கை, பிரகாசிக்க உதவியுள்ளது.
பிளாஸ்டர் ஆஃப் பாரீசால் (பிஓபி) செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதியில்லை என்று கர்நாடக வனத்துறை தடை செய்துள்ளது. இதனால் காகிதம், மண் ஆகியவற்றை மூல பொருள்களாக கொண்டு விநாயகர் சிலைகளை அருண் தயாரிக்கிறார்.
இதையும் படிங்க: 122 டிகிரி கொதிக்கும் மணலில் சாப்பாத்திச் சுடலாம்!