உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் பதக். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் பிள்ளையும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். நேற்று இவர்கள் மூவரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலங்களாகக் கிடந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சஹரன்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, மூவரின் உடல்களையும் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் ரத்தக்கறையுடன் கிடந்த கத்தி ஒன்றையும் பறிமுதல்செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய காவல் துறை உயர் அலுவலர் உபேந்திர அகர்வால், "முன்விரோதம் காரணமாக மூவரும் கொலைசெய்யப்பட்டிருக்காலாம். அஜய் பதக்கின் மகன், அவர் வைத்திருந்த காரும் காணவில்லை. அவரது மகனையும் கொலையாளிகளையும் தீவிரமாகத் தேடிவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: முதல் முழு நீள சிங்கிள் ஷாட் படம்! - அசரவைக்கும் பார்த்திபன்