ETV Bharat / bharat

ஊதிய நிலுவை - புதுவை நகராட்சி ஊழியர்கள் போராட்டம்! - ஊழியர்கள்

புதுச்சேரி: ஊதிய நிலுவையை உடனே வழங்க வலியுறுத்தி, நகராட்சி ஊழியர்கள் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

employees
employees
author img

By

Published : Aug 3, 2020, 7:38 PM IST

புதுவை நகராட்சியில் 350க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத இறுதி நாளன்று ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த மே மாத ஊதியத்தொகை போராட்டத்திற்குப் பிறகே அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், ஜூன், ஜூலை மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நகராட்சி வரி வசூல் செய்த பிறகே, அந்த நிதியில் இருந்து தங்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும், ஊரடங்கின் போது வரி வசூல் காலதாமதமாவதால், ஊதியத்தையும் தாமதப்படுத்துவதாக நகராட்சி ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், தங்களுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, கம்பன் கலையரங்கில் உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் இன்று(ஆகஸ்ட் 3) திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய நிலுவை - புதுவை நகராட்சி ஊழியர்கள் போராட்டம்!

இதில் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஊழியர்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் நெருக்கமாக அமர்ந்து ஈடுபட்டது தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானா மாநிலத்தில் இன்று 983 பேருக்குக் கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.