புதுச்சேரி கடற்கரை சாலையை அழகுப்படுத்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை சாலை முழுவதும் ஒரு பக்கத்தில் பாதி வளர்ந்த தென்னை மரங்கள் ஆங்காங்கே நடப்பட்டன.
அதற்கு தேவையான நீர் தண்ணீர் லாரி மூலம் ஊற்றப்படுகிறது. இந்த தென்னை மரங்கள் புதுச்சேரியின் கடற்கரைக்கு தற்போது மிகவும் அழகு சேர்த்து சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
புதுச்சேரியில், கொட்டும் மழையிலும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய நகராட்சி ஊழியர்கள்! இதற்கு அரசு சார்பில் தினமும் தண்ணீர் லாரி மூலம் நீர் ஊற்ற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரம் முன்பு புதுச்சேரியில் பெய்த கன மழையின்போதும் அதனை பொருட்படுத்தாமல் புதுச்சேரி நகராட்சி துறை சார்பில் தென்னை மரங்களுக்கு தண்ணீர் வாகனம் மூலம் நீர் ஊற்றிக்கொண்டிருந்த காட்சிகள் வைரலாகியுள்ளது..இதையும் படிங்க: வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - தத்தளிக்கும் மக்கள்!